என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பெண் என்ஜினீயர் தற்கொலை"
கோவை:
கோவை சுண்ட பாளையம் கலிக்கநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் நவீன்குமார். கூலி தொழிலாளி. இவரது மனைவி சவுந்தர்யா (23). என்ஜினீயரிங் படித்துள்ளார். இவர்களுக்கு கடந்த 14.11.2018 அன்று திருமணம் நடந்தது. தலை பொங்கலுக்காக சவுந்தர்யா தனது தாய் வீட்டுக்கு சென்றிருந்தார்.
நேற்று மாலை வீட்டில் சவுந்தர்யா மின் விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கினார். இதைப்பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்துக்கு டி.எஸ்.பி. வேல்முருகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
என்ஜினீயரான சவுந்தர்யாவுக்கு தனது கணவர் 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளது வேதனையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணங்கள் எதுவும் உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 2 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.
இதேபோல் கோவை நரசிம்மநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் மாசாணம். டிரைவர். இவரது மனைவி தீபிகா(25). இவர்கள் காதலித்து கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். சம்பவத்தன்று தீபிகா வீட்டில் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் டி.எஸ்.பி. மணி விசாரணை நடத்தினார். குடும்ப பிரச்சினை காரமணாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. திருமணமாகி 1½ வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.
கோவை சுந்தராபுரம் கல்லுக்குழி 2-வது வீதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகள் இந்துமதி (26) என்ஜினீயரிங் பட்டதாரி. சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இவர் கடந்த 6 மாதத்திற்கு மேல் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இன்று காலை இந்துமதி படுத்து இருந்த அறை உள்பக்கம் பூட்டப்பட்டு இருந்தது. அவரை தாய் கதவை தட்டினார். ஆனால் திறக்கப்படவில்லை. இதனால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அப்போது இந்துமதி தனது துப்பட்டாவால் மின் விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து போத்தனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து சென்றனர். இந்துமதி அறையை சோதனை செய்த போது அங்கு அவர் எ ழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது.
அதில் இந்து மதி எனது சாவுக்கு யாரும் காரணம் அல்ல. நானாகவே இந்த முடிவை எடுத்து கொண்டேன். குடும்பத்தினர் என்னை மிகவும் நேசித்தனர். இந்த முடிவு எடுத்ததற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். குடும்பத்தினர் எனக்காக நிறைய தியாகம் செய்து உள்ளனர். அவர்களை நேசிக்கிறேன் என எழுதப்பட்டு இருந்தது. இந்துமதி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்